Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டிவிஎஸ் குடும்பத்தில் ரூ.1.80 லட்சம் கோடி சொத்து பங்கீட்டுச் சர்ச்சை

டிவிஎஸ் குடும்பத்தில் ரூ.1.80 லட்சம் கோடி சொத்து பங்கீட்டுச் சர்ச்சை

இதில் ஒருபுறம் வேணு சீனிவாசனும் அவரது மகன் சுதர்சன் வேணுவும், மறுபுறம் வேணு சீனிவாசனின் மனைவியும் டாஃபே நிறுவனத் தலைவருமான மல்லிகா சீனிவாசனும் அவரது மகள் லட்சுமி வேணுவும் எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் குடும்பத்தில் ரூ.1.80 லட்சம் கோடிக்கும் அதிகமான நிறுவனச் சொத்துக்களைப் பிரிப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.


இதில் ஒருபுறம் வேணு சீனிவாசனும் அவரது மகன் சுதர்சன் வேணுவும், மறுபுறம் வேணு சீனிவாசனின் மனைவியும் டாஃபே நிறுவனத் தலைவருமான மல்லிகா சீனிவாசனும் அவரது மகள் லட்சுமி வேணுவும் எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர். இதுகுறித்து வேணு ஸ்ரீனிவாசன் தெரிவித்ததாவது: நிறுவனங்களின் பங்குகள் தனது தனிப்பட்ட உழைப்பில் உருவான சொத்துக்கள். குடும்பத்தின் நலனைக் கருதி மகன் சுதர்சனுக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தையும், மகள் லட்சுமிக்கு சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தையும் நியாயமான முறையில் பிரித்துக் கொடுத்துவிட்டேன். மல்லிகா சீனிவாசனின் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய டாஃபே நிறுவனத்தின் உரிமை மகள் லட்சுமிக்கே செல்லும் என்பதைக் கணக்கில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
 
ஆனால், இந்த விளக்கத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மல்லிகா சீனிவாசன் கூறுகையில், "குடும்பத்தில் இன்னும் எந்தவிதமான இறுதிப் பொருளாதாரச் சொத்துப் பங்கீடும் நடைபெறவில்லை. நிறுவனங்களை நடத்துவதற்கான நிர்வாகப் பொறுப்பை பிரித்துக் கொடுப்பதும், அதன் உண்மையான பொருளாதாரச் சொத்துரிமை என்பதும் முற்றிலும் வெவ்வேறானவை. இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி மகன் மற்றும் மகள் இருவருக்கும் சமமான சொத்துரிமை கிடைக்க வேண்டும்" என்றார்.

சுதர்சன் வேணு வசம் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.90 லட்சம் கோடியைத் தொட்டுள்ள நிலையில், லட்சுமி வேணுவிடம் ஒப்படைக்கப்பட்ட நிறுவனத்தின் மதிப்பு அதில் குறைந்த அளவே இருப்பதும், சொத்துக்கள் பெருமளவில் மகனுக்கே செல்லும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதும் இந்த மோதலின் பிரதானப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கடந்த 18 மாதங்களாகத் தொழிலதிபர்கள் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருவதால் இந்த விவகாரம் விரைவில் நீதிமன்றத்தை நோக்கி நகரும் சூழல் உருவாகியுள்ளது.
முந்தைய செய்தி
வரும் 16-ம் தேதி சர்வதேச ஆட்டோமொபைல் விநியோக சங்கிலி மாநாடு
அடுத்த செய்தி
தமிழக முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமனம்

தொடர்புடைய செய்திகள்